Skip to main content

எப்போது விடுதலை? -அற்புதம்மாள் கண்ணீர்

 

ar


இராமநாதபுரத்தில் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாழக்கூடிய 7 பேரை விடுதலை செய்யக் கோரியும் மக்கள் சந்திப்பு இயக்கம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் அற்புதம்மாள் பங்கேற்றார்.

 

 இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள்,   ராஜீவ் காந்தி படுகொலையில் அப்பாவிகளான 7 பேர் 28 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர்.  அவர்களுடன் அவரது குடும்பத்தினரும் 28 ஆண்டுகளாக வாழ்வை இழந்துள்ளனர்.  இந்த ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் என்னை சந்தித்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த அதன் அடிப்படையில் தற்போது உள்ள அரசு அமைச்சரவையை கூட்டி 161 பிரிவை பயன்படுத்தி விடுவிக்க வேண்டுமென அமைச்சரவையில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தற்போது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு சுமார் ஐந்து மாதங்கள் ஆகிறது .

 

ar

 

இது குறித்து இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  உச்சநீதிமன்றம் 7 பேர் விடுதலை குறித்து மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவு தேவை அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பப்பட்டும் இதுவரையில் விடுவிக்கப்படாமல் உள்ளது.   சட்டத்தை மதித்து தங்களது குடும்பத்தினர் 28 ஆண்டுகளாக வாழக்கூடிய நிலையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் பின்பற்ற வேண்டும்.  இதை வலியுறுத்தும் விதமாக மக்கள் சந்திப்பு இயக்கம்.  அதில் கலந்து கொண்டு வருகிறேன் கோவை,  ஈரோடு,  மதுரை,  காரைக்குடி தற்போது ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் இந்த இயக்கம்  பங்கேற்றுள்ள இந்த சந்திப்பில் பங்கேற்பது அரசுக்கு எதிரான செயல்பாடுகள் அல்ல.   அரசுக்கு கிடைத்துள்ள ஆதரவு நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்று வருகிறது.   விரைவில் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்த சந்திப்பு இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது என்று கண்ணீருடன் தெரிவித்தார். 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்