தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்தித்தார். அப்போது பேரறிவாளன் உள்ளிட்ட7 பேரை விடுவிக்கும் அரசின் பரிந்துரையை ஏற்குமாறு வலியுறுத்தினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள்,
தமது மகன் தரப்பு நியாயத்தை மனுவில் எழுதியிருப்பது குறித்து விளக்கினேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி தாமஸின் கருத்தையும் மனுவில் குறிப்பிட்டு உள்ளேன்.
தனது மனுவை விரைவில் கவனித்து முடிவு செய்வதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். எனது கோரிக்கையை கனிவுடன் கேட்டார். உச்சநீதிமன்ற உத்தரவு, அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் பரிசீலிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.