Aroor Tamilnadu congratulates Chief Minister!

‘நக்கீரன்’ இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும், ‘இனிய உதயம்’ இதழின் இணையாசிரியருமான கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், தனது பிறந்த நாளுக்காகவும், அண்மையில் தான் பெற்ற அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டத்திற்காகவும் வாழ்த்து பெற, முதல்வர் ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் குடும்பத்துடன் சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் எழுதிய நூல்களுடன், திருவாரூர் தேர் வடிவ நினைவுப் பரிசையும் முதல்வருக்கு வழங்கி வாழ்த்தினைப் பெற்றார்.அந்த சந்திப்பின் போது, தான் தலைவராக இருக்கும் ‘திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவை’யின் சார்பாக முதல்வரிடம் ஒரு கோரிக்கை மனுவையும் ஆரூர் தமிழ்நாடன் வழங்கினார். அதில்,

Advertisment

Aroor Tamilnadu congratulates Chief Minister!

1.திராவிட இயக்கத்தின் கொள்கைகளை முதன் முதலில் தன் இலக்கியக் கரங்களால் ஏந்திய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மணிமண்டபம், அமைக்க வேண்டும்

2.திராவிட இயக்கக் கவிஞர் பெருமக்களான உவமைக் கவிஞர் சுரதா,கவியரசர் பொன்னிவளவன்,கவிக்கோ அப்துல்ரகுமான் உள்ளிட்டவர்களுக்கு ஒரே இடத்தில் இலக்கிய நினைவரங்கம் அமைப்பதோடு,அவர்கள் பெயரிலும் அரசு விருதுகளை வழங்கவேண்டும்.

3.பாட நூல்களில் திராவிட இயக்கப் படைப்பாளர்களின் படைப்புகளை 90 சதவிதம் இடம்பெறச் செய்து,மாணவர்கள் இதயங்களில் இன உணர்வையும் மொழி உணர்வையும் விதைக்க உரிய வழிவகைகளைச் செய்யவேண்டும் என்றும் அன்புகூர்ந்து கேட்டுக்கொள்கிறோம்.உள்ளிட்ட தமிழ் இலக்கியம் சார்ந்த கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.