
பழனியில் முருகன் கோவிலில் தனது பர்ஸை தவறவிட்ட இராணுவ வீரர் அதில் ராணுவத்தின் முக்கிய ரகசியஆவணங்கள் இருப்பதாகவும் எனவே யாருடைய கையிலாவது என் பர்ஸ் சிக்கியிருந்தால் அதனை ஒப்படைத்துவிடும்படியும் வீடியோ வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த ராணுவ வீரர் மனோ. இவர் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோவிலான பழனியில் சாமிதரிசனம் செய்ய வந்துள்ளார். அப்பொழுது கோவிலில் அவருடைய பர்ஸை தவறவிட்டுள்ளார். இந்நிலையில் தான் தவறவிட்ட பர்ஸ் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை ராணுவ வீரர் மனோ பகிர்ந்துள்ளார். அதில், ''பழநி கோவிலில் எனது பர்ஸ் மிஸ்சாகி விட்டது. யாருடைய கையிலாவது அது கிடைத்திருந்தால் அதனை போலீசிடம் ஒப்படைத்துவிடுங்க. அதில் ராணுவம் சம்பந்தமான சில முக்கிய ஆவணங்கள் இருக்கிறது. பணமும் இருக்கிறது. பணம் கூட வேண்டாம் அதைக்கூட நீங்களே எடுத்துக்கோங்க ஆனால் அந்த ராணுவ ஆவணங்கள் முக்கியம் எனவே பர்ஸை ஒப்படைத்துவிடுங்கள்' எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)