Skip to main content

197 நாடுகளின் கொடிகளுடன் 2,800 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொள்ளும் ராணுவ வீரர்!

Published on 20/11/2021 | Edited on 20/11/2021

 

Army soldier walking 2800 km with flags of 197 countries

 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் பாலமுருகன் (வயது 33). இவர் அசாம் ரைஃபிள் பிரிவில் பணியாற்றிவருகிறார். இவர் 197 நாடுகளின் தேசிய கொடியை சைக்கிளில் கட்டிக்கொண்டு ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திலிருந்து அயோத்திவரை 2,800 கிலோ மீட்டர் நடை பயணமாக கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி புறப்பட்டார்.

 

கரோனா அதிகரித்த காலத்தில் தன் உயிரையும், பணயம் வைத்து கரோனாவைக் கட்டுப்படுத்த பெரும் முயற்சி மேற்கொண்ட அனைத்து  நாட்டு பிரதமர்கள், முதலமைச்சர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ராணுவத்தினர், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள், அரசுத்துறையினர் என அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி செலுத்தும் வகையில் இந்த நடைப்பயணத்தை துவங்கியுள்ளார்.

 

Army soldier walking 2800 km with flags of 197 countries

 

இந்நிலையில் நேற்று (19.11.21) காலை 10.30 மணியளவில் திருச்சி வந்தடைந்தார். அப்போது அவர் கூறுகையில், “கரோனாவால் உயிரிழந்த அனைத்து நாட்டு மக்களையும் நினைவுகூரும் நோக்கில் அணையா விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தியும், மனித இனத்தைக் காக்க கோவிட் - 19 தடுப்பூசி அவசியம் மற்றும் கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளைப் பாதுகாத்து கல்வி வழங்கிட வேண்டும் என்றும், நோயினை வெல்ல நாள்தோறும் உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து அவசியம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் நடைப்பயணம் மேற்கொள்கிறேன்” என கூறினார்.

 

திருச்சி மாவட்டத்திற்கு வந்த அவரை மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், சிலம்பம்  அரவிந்த், தண்ணீர் அமைப்புச் செயலாளர்  பேராசிரியர் கி. சதீஸ்குமார், நிர்வாகி ஆர்.கே. ராஜா மற்றும் ரெக்கார்டர் ஜெட்லி ஆகியோர் திருச்சி காவேரி பாலம் அருகில் காலை 10.30 மணியவில் வரவேற்று பொன்னாடை அணிவித்து பயணம் வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வழியனுப்பிவைத்தார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.