பாஜக உறுப்பினர் தண்டபாணி மற்றும் ராணுவ வீரர் பாலமுருகன் இருவரும் திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவ்விருவரின் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்துவந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இன்று (04.06.2021) அதிகாலை ராணுவ வீரர் பாலமுருகன், தண்டபாணியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அறிந்துவந்த அரியமங்கலம் காவல்துறையினர், ராணுவ வீரர் பாலமுருகனை கைது செய்ததோடு பாஜக நிர்வாகி தண்டபாணியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.