ரப

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகளோடு சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இதுவரை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் சூலூரிலிருந்து வெலிங்டன் நோக்கி சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த ராணுவ உயர் அதிகாரிகளின்நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்த விமானத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் பயணித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment