Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் ராணுவ விமானம் விபத்து இல்லை -அரசு அதிகாரிகள் தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகில் உள்ள பேயாடிக்கோட்டை ஊராட்சி மேல வசந்தனூர் கிராமத்தில் உள்ள கன்மாயில் விமானம் விழுந்து எரிவதாக தகவல்கள் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இப்படி ஒரு விபத்து இல்லை என்று கூறப்பட்டு வருகிறது.

Advertisment

இது குறித்து நாம் அந்த கிராமத்தினரிடம் கேட்டபோது, சம்பவ இடத்தில் இருந்து நம்மிடம் பேசிய கிராம இளைஞர்கள் பயங்கர அதிர்வோடு சத்தம் கேட்டது. அப்போது வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்த போது ராணுவ விமானம் போல ஒரு விமானம் பறந்து போனது. அதன் பிறகு மேலவசந்தனூர் கண்மாய் பக்கமாக புகை வந்தது. போய் பார்த்தால் கன்மாயில் இருந்த சீமைக்கருவேல மரங்கள், புல் எரிந்தது. அங்கு விமானமோ, விமானத்தின் பாகங்களோ இல்லை. அந்தப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்தவர்களும் விமானம் வந்து போன போது அதிக சத்தம் வந்தது. அப்போது ஏதோ பொருள் விழுந்தது போல இருந்தது. அதன் பிறகு கன்மாய்யில் கருவேல மரங்கள் எரிந்து புகை வந்தது என்றும் சொல்கிறார்கள் என்றனர்.

Advertisment

இது குறித்து அதிகாரிகள் தரப்பில், சூப்பர்சோனிக் விமானம் வந்து சென்றுள்ளது. ஆனால் விபத்து இல்லை. ஆனால் வேறு எங்கோ நடந்த விமான விபத்து படங்களை போட்டு தகவல்கள் பரப்பப்படுகிறது. விமான விபத்து என்பது வதந்தி என்றனர்.

indian army flight PUDUKKOTTAI DISTRICT
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe