/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a72619.jpg)
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பலரும் கருத்துக்கள் மற்றும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர். இன்று பெரம்பூர் அயனாவரம் பகுதியில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற தமிழக முதல்வர் அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து தமிழக டிஜிபி பதிலளிக்கக்கோரி பட்டியல் இனத்தவர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாளிதழ் செய்தி அடிப்படையாக வைத்து தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ளபட்டியல் இனத்தவர் நல ஆணையம், படுகொலை என்பதால் தமிழக அரசு சார்பில் தமிழக காவல்துறை டிஜிபி விரைந்து பதிலளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)