Armstrong Assassination; 3 more arrested

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.

Advertisment

24 பேரில் திருவேங்கடம் என்ற ஒருவர் போலீசார் விசாரணையின் போது போலீசாரை தாக்க முயன்றதால் சுட்டு என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட முக்கிய நபர்கள் பலரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, சிலர் அவ்வப்போது போலீஸ் காவலில் எடுத்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisment

ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி துணைத் தலைவர் ஹரிகரன், அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு துணைச் செயலாளர் மலர்கொடி, திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், நூர் விஜய், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தமான், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி என 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தற்போது இந்த கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கோபி, குமரன் ஆகிய இருவரும் ஆந்திராவில் இருந்து நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்து ரவுடி ராஜேஷிடம் கொடுத்து தெரியவந்துள்ளது. ராஜேஷ் மீது இரண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. தற்பொழுது கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment