Advertisment

காவிரி ரயில் பாலத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

 Armed police guard the Cauvery railway bridge

இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின விழா அமைதியான முறையில் நடைபெறும் வகையில் மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல் சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இரவு நேர ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு ரயில் நிலையத்தில் உடமைகள் தீவிர பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் ஈரோடு ரயில்வே போலீசார் சார்பில் காவிரி ஆற்றில் உள்ள ரயில்வே இரும்பு பாலத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரயில்வே போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

Bridge Erode police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe