Skip to main content

ஐயப்பன் புனிதத்தை கெடுக்க நினைக்கும் கம்யூனிஸ்டுகள்  இடம்பெறும் கூட்டணியை   தோற்கடிப்பதே லட்சியம் - அர்ஜுன் சம்பத் 

Published on 06/01/2019 | Edited on 06/01/2019
a


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார்.  இக்கோயிலில் உள்ள ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜை மற்றும்  வழிபாடுகளும் தீபாரதனையும் செய்யப்பட்டது.  பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயரின்  வீதி உலாவை தொடங்கி வைத்தார். இவ்வீதி உலாவனது, மங்கலம்பேட்டையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக 100-க்கும் மேற்பட்ட,  போலீஸ் பாதுகாப்புடன் சென்றது. 

 

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அர்ஜுன் சம்பத் அவர் கூறியதாவது :- 

’’இப்பகுதியில் நடக்கும் மோசடி மதமாற்றத்தை முறியடிப்பதற்காக 96 அடி உயரத்தில் வெண்கலத்தாலான ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட உள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சிறப்பு சட்டம் அமைக்க வேண்டும் என்று அனைத்து பகுதியிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

 

ஐயப்பன் புனிதத்தை கெடுக்க நினைக்கும் கம்யூனிஸ்டுகள் இடம்பெறும் அதிமுக திமுக உள்ளிட்ட கூட்டணிகள் எதுவாக  இருந்தாலும்,  வருகின்ற திருவாரூர் இடைத்தேர்தலில் தோற்கடிப்பதே இந்து மக்கள் கட்சியின் முக்கிய நோக்கமாகும்.

 

ஆன்மீக அரசியல் முன்னெடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்த் அரியணையில் ஏற  இந்து மக்கள் கட்சி அனைத்து தேர்தலிலும் தீவிரமாக உழைக்கும். 


கௌசல்யா திருமணமானது திராவிட பாணியில் பெரியார் சிலை முன்பு நடைபெற்றது.  இதில் சக்தி ஒழுக்கம் கெட்டவர் என  ஒரு பெண் புகார் அளித்தும், அதை கெளசல்யா, சக்தியும் ஒப்பு கொண்ட பின்,  கட்டப்பஞ்சாயத்து செய்து தீர்வு காணும் தியாகு மற்றும் கொளத்தூர் மணி ஆகியோர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கட்டப்பஞ்சாயத்து செய்வது குற்றம் என்பதால் உடனடியாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் மனிதி  என்ற பெண்கள் அமைப்பானது,  கம்யூனிஸ்ட் அமைப்பு.  திராவிடத்தை ஆதரிக்கும் இந்த அமைப்பை பயன்படுத்தி ஐயப்பன் கோவில் புனிதத்தையும்,  கேரளாவில் சட்ட ஒழுங்கையும் சீர்குலைக்க செய்யும் இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும்.  இந்த அமைப்பில் உள்ளவர்களை தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்.’’

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் ராமேஸ்வரத்திலும் அமித்ஷா கோவையிலும் போட்டியிட வேண்டும்” - அர்ஜுன் சம்பத்

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

“Prime Minister should contest in Rameswaram and Amit Shah in Coimbatore” Arjun Sampath

 

பிரதமர் ராமேஸ்வரத்திலும் அமித்ஷா கோவையிலும் போட்டியிட வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

 

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறாமல் இருக்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட வேண்டும். பிரதமர் மோடி போன முறை காசியில் போட்டியிட்டார். இந்தியாவில் இரண்டு நகரங்கள் தான் முக்கியம். ஒன்று காசி மற்றொன்று ராமேஸ்வரம். இந்த முறை பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிட வேண்டும்.

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோயம்புத்தூரில் போட்டியிட வேண்டும். கோயம்புத்தூரில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளார்கள். விடுதலைச் சிறுத்தைகள் நேரடியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளராகச் செயல்படுகிறார்கள். அதனால் அமித்ஷாவும் மோடியும் தமிழகத்தில் போட்டியிட வேண்டும். அவ்வாறு போட்டியிட்டால் 40க்கு 40 தமிழ்நாட்டில் வெல்லலாம்.

 

முன்னால் இருந்த நிலைமை வேறு. இப்பொழுது இருக்கும் நிலைமை வேறு. மோடியைப் பிரதமராக ஏற்றுக்கொள்கின்ற கட்சிதான் தமிழகத்தில் வெற்றி பெறும். தமிழகத்தில் அதிமுக, பிஜேபி கூட்டணி மிக வலிமையாக உள்ளது. அந்தக் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சில பேர் எதையாவது சொல்லுவார்கள். கூட்டணி மிக வலுவாக உள்ளது.

 

எடப்பாடி பழனிசாமி தான் தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணிக்கு தலைமை வகிக்கிறார். திராவிட இயக்க ஆட்சியிலேயே எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆட்சி தான் சிறந்த ஆட்சி. மின்சார பிரச்சனை கடந்த ஆட்சிக்காலத்தில் இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் இல்லை. திராவிட இயக்க முதலமைச்சர்களில் கலைஞர், ஜெயலலிதா, அண்ணா, எம்ஜிஆர் என அனைவரையும் விட சிறந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். திமுக ஆட்சிக்கு வந்து 17 மாதங்கள் ஆகிறது. இந்த ஆட்சிக்கு நிச்சயமாக 2024 தேர்தலில் மக்கள் பதில் சொல்லுவார்கள். 40 இடங்களிலும் அதிமுக, பிஜேபி கூட்டணி வெல்லும்” எனக் கூறினார்.

 

 

Next Story

'காவி அம்பேத்கர் வெறுத்த நிறம் அல்ல அவர் விரும்பி ஏற்ற நிறம்''-ஹெச்.ராஜா, அர்ஜூன்சம்பத் கூட்டாக பேட்டி 

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

'Kavi Ambedkar was not the color he hated but the color he loved' - H. Raja interview

 

அண்மையில் அம்பேத்கரின் 66ஆவது நினைவு நாளின்போது இந்து மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்டிருந்த போஸ்டரில் அம்பேத்கருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக அக்கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டிருந்தார். 

 

இந்நிலையில் இன்று சினிமா சண்டை பயிற்சியாளர் கனல்கண்ணன், பாஜக பிரமுகர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, ''அம்பேத்கரே காவி அணிந்துதான் இருந்தார். அந்தப் படமே எங்களிடம் இருக்கிறது. இப்ப கூட எங்களால் காட்ட முடியும். அதை போஸ்டரில் போட்டால் உடனே காவல்துறை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கைக்கூலியாக செயல்படுமா என்ன? இதில் என்ன தேசிய பாதுகாப்பு கெட்டுப் போய்விட்டது.  அம்பேத்கர் புத்த மதத்தை தழுவினார். புத்த பிக்குகள் என்ன உடை அணிகிறார்கள். இவர்கள் யார் அதை டிடர்மைன்ட் பண்ண. எனவே ஒரு பெரிய ரவுடிகள் கூட்டத்தில் தமிழக அரசு சிக்கி தவித்து வருகிறது. நாடக காதல், ரவுடி கும்பல்கள் கையில் இருக்கிறது இந்த அரசாங்கம். காவல்துறை அந்த ரவுடி கும்பலின் ஏவல் ஆட்களாக போய் கும்பகோணத்தில் குருமூர்த்தியை கைது செய்திருக்கிறார்கள். குருமூர்த்தியை கைது செய்தது காவல்துறைக்கே அவமானம்''என்றார்.

 

'Kavi Ambedkar was not the color he hated but the color he loved' - H. Raja interview

 

அதன்பிறகு பேசிய அர்ஜுன் சம்பத், ''காவிநிறம் என்பது அம்பேத்கர் வெறுத்த நிறம் அல்ல அவர் விரும்பி ஏற்றுக் கொண்ட நிறம். புத்த மதமும் இந்து சமயத்தினுடைய ஒரு கூறு தான். இந்துவாகப் பிறந்தேன் இந்துவாக சாகமாட்டேன் என்று சொன்னது ஆதிக்க ஜாதியினருக்கும், ஜாதி வெறி கொண்டவர்களுக்கும் பாடம் புகட்டுவதற்காக, சீர்திருத்துவதற்காக அப்படி ஒரு முடிவை எடுத்தார். ஆனால் அவர் சட்டம் செய்கிற பொழுது இந்துக்கள் மட்டுமே போட்டியிட கூடிய தொகுதியை உருவாக்கினார். தனித்தொகுதி முறையை உருவாக்கினார். தனி தொகுதியில் யார் போட்டியிட முடியும் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் போட்டியிட முடியாது. மேல் சாதிக்காரர் கூட போட்டியிட முடியாது. தனித்தொகுதியில் சலுகைகளைஅனுபவிப்பவர்கள் இந்துக்களாக மட்டும் தான் இருக்க முடியும். இந்த சட்டத்தினால் தான் திருமாவளவன் இன்று வரை இந்து என்று சான்றிதழ் வைத்திருக்கிறார்''என செல்போனில் இருந்த புகைப்படத்தை எடுத்துக்காட்டினார்.

 

அப்போது குறுக்கிட்ட ஹெச்.ராஜா, ''அம்பேத்கருக்கு காவி உடை போட்டவரை கைது செய்யலாம் என்றால் வள்ளலாருக்கு திருநீறு இல்லாமல் படம் போட்டவரை கைது செய்யலாமே'' என்று ஆவேசமடைந்தார்.