Advertisment

“கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும்” - அர்ஜுன் சம்பத் ! 

Arjun Sampath struggle to bring back agricultural law!

Advertisment

இந்து மக்கள் கட்சி சார்பில் ஈரோட்டில் உள்ள வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே 11ஆம் தேதி(இன்று), அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிர்ப்பு, தொடர் போராட்டம் காரணமாக மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி திரும்ப பெற்று விவசாயிகளிடம் தனது வருத்தத்தை பதிவு செய்தார். அப்படி வாபஸ் பெறப்பட்ட மூன்று வேளான் சட்டங்களையும் திரும்பவும் அமல்படுத்தக் கோரிதான் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

அர்ஜுன் சம்பத் கூறியதாவது; “தமிழக அரசு டாஸ்மாக் கடையை மூடிவிட்டு அதற்கு பதிலாக கள்ளுக்கடைகளைத்திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் வங்கி கணக்கிலும் ரூபாய் 6 ஆயிரம் பிரதமர் மோடி வரவு வைத்துள்ளார். அதேபோல் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையும் மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

பல்வேறு அரசியல் நெருக்கடி காரணமாகவே மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு மீண்டும் மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். ஜனவரி 21-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கள் இறக்கும் போராட்டம் நடைபெறுகிறது இதற்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்து கள் இறக்கும் போராட்டத்தில் பங்கேற்கும்.

வேளாண் சட்டத்தை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் 11ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. ஏழு பேர் விடுதலையில் தமிழக அரசு, ஆளுநர் மீது பழி போடாமல் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் விடுதலை செய்ய வேண்டும். அதே போல் தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி பெட்ரோல், டீசல் வரியை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

arjun sampth farm bill
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe