"நடிகர் சூர்யா, ரஜினிகாந்த் போன்றவர்கள் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகின்றனர்," என்று கூறியுள்ளார்இந்து மக்கள்
கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.
கடந்த 20ஆம் தேதிஅடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் இந்து மக்கள் கட்சியின் நாகை மாவட்ட பொறுப்பாளரான பார்த்திபனுக்கு எலும்பு முறிந்தநிலையில் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவரைஇந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத்நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தவர் செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார், "விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தீவிரவாதத்திற்கு ஆதரவாகசெயல்படுகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தை ஒரு ஐ.எஸ்.ஐ கூடாரமாக மாற்றுவதற்கு பெரிய அளவிலான முயற்சி நடைபெற்று வருகிறது. நாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி உட்படபலரும் அதற்கு ஆதரவாக இருக்கின்றனர்
புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா, ரஜினிகாந்த், உள்ளிட்ட நடிகர்கள் சரியாகப் படித்துப் பார்க்கவில்லை. அதை சரியாக அறிந்து கொள்ளவில்லை. புதியகல்வி கொள்கையின் நோக்கம் என்பது நவோதயா கல்வி போல தரமான கல்வி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்பதே. வேண்டுமென்றே திராவிடமுன்னேற்றக் கழகமும், சிறிய சிறிய நக்சல் அமைப்புகளும், இந்த விஷயத்தில்அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். " என தொிவி்த்தார்.