Arjun Sampath arrested in 'protest demanding the release of his son'

கோவையில் உள்ள ஈஷா மையம் குறித்தும், அந்த மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்தும் நக்கீரன் இதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இதனால், ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜூன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

அப்போது அவர், நக்கீரன் இதழ் குறித்தும், நக்கீரன் ஆசிரியர் குறித்தும் வெறுப்பு கருத்துக்களைப் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து, திமுக பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், ஓம்கார் பாலாஜி மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், தன் மீது போடப்பட்டுள்ள வழக்கிற்கு முன் ஜாமீன் கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, வழக்கு தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்ய ஓம்கார் பாலாஜிக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஓம்கார் பாலாஜி, 13.11.2024 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவுப்படி மன்னிப்பு கேட்டு மனுத்தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ‘உயர்நீதிமன்ற உத்தரவுப்படி என்று இல்லாமல் தானாக முன்வந்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கபதாக தான் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறக்கபிக்க முடியாது என்று கூறி, இந்த வழக்கின் விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டு கோவைக்கு செல்லப்பட்டுள்ளார்.

 Arjun Sampath arrested in 'protest demanding the release of his son'

இந்நிலையில் தன்னுடைய மகன் ஓம்கார் பாலாஜியை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் போராட்டத்தில் ஈடுபட்டார். கோவையில் அர்ஜுன் சம்பத் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. போலீசார் அனுமதி இல்லாமலேயே கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது முன்னேற்பாடாக குவிக்கப்பட்ட போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளை குண்டுக்கட்டாக கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது ஓம்கார் பாலாஜியை (மகனை) விடுதலை செய் என அர்ஜுன் சம்பத் ஆவேசமாக கோஷம் எழுப்பினார்.

Advertisment