இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் (செப். 5) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், அவரது பிறந்தநாளை தமிழ்நாடு லயன்ஸ் கிளப் ஆசிரியர் தினமாக கொண்டாடிவருகிறது. ஒவ்வொரு வருடமும் இந்தக் கிளப்பின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களில் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு ‘அறம் செய் நல்லாசிரியர் விருது’ எனும் விருது வழங்கப்பட்டுவருகிறது.
இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில், அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் விலங்கியல் ஆசிரியர் பஞ்சாபகேசன் சிறந்த ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு ‘அறம் செய் நல்லாசிரியர் விருது’ வழங்கப்பட்டது.