Advertisment

மகள் தற்கொலைக்கு காரணமானவனை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை கைது...

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல், இவர் அரசு பேருந்து ஓட்டுனர். தற்போது இவர் விருத்தாசலம் அருகே புதுக்குப்பம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

Advertisment

murder

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2374301885"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மனைவி இறந்த பின்னர் அப்பகுதியை சேர்ந்த ஏழுமலை மகள் ஆனந்தவள்ளிக்கும், குமரவேலுக்கும் இடையே தவறான தொடர்பு ஏற்பட்டு, ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த 18.09.18 அன்று குமரவேலும், ஆனந்தவள்ளியும் இலைக்கடம்பூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆனந்தவள்ளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை, குமரவேலை தீர்த்து கட்ட திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில் விருத்தாசலத்தில் குமரவேலும், ஏழுமலை என்பவரும் நேற்று இரவு மது குடித்துள்ளனர். மதுபோதை ஏறியதும் ஏழுமலை, குமரவேல் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2439263953"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பின்னர் அவரது ஆட்டோவில் குமரவேலின் உடலை ஏற்றி செந்துறை அருகே உள்ள பெரியாகுறிச்சி சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுரங்கத்திற்கு எதிரே போட்டுவிட்டு ஊருக்கு மீண்டும் ஆட்டோவில் செல்லும்போது, விருத்தாசலத்தில் போலீசார் மறித்து வாகன சோதனை செய்தனர். அப்போது வண்டியில் உள்ள இரத்த கரையை வைத்து ஏழுமலையை விருத்தாசலம் போலீசார் கைது செய்தனர். இது குறித்து விருத்தாசலம் போலீசார், செந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விரைந்து சென்று குமரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் கொலை செய்த ஆட்டோ டிரைவர் ஏழுமலையை விசாரித்து வருகின்றனர்.

murder sendurai Ariyalur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe