அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்த ஐந்து நபர்கள் கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நால்வருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று வீடுகளுக்கு அனுப்பிவிட்டனர். ஒருவருக்கு மட்டும் நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு நோய் முற்றிலும் குணமாகி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டனர் மருத்துவ குழுவினர்.

Advertisment

 sendurai -

இந்த நிலையில் ஏற்கனவே நோய் பாதிப்பு இல்லை என்று வீட்டுக்கு அனுப்பிய ஒருவரது மருந்து கடையில் வேலை செய்து வந்த இரண்டு பெண்களுக்கு கரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டு அவர்கள் இருவரையும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்,

நோய் பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களது கடையில் வேலை செய்தவர்களுக்கு எப்படி கரோனா நோய் பரவியது என அரியலூர் மாவட்ட மக்களை பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

இதுபற்றி மருத்துவ அதிகாரிகள் கூறும்போது, கரோனா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டிருந்தாலும் கூட ஆரம்ப கட்டத்தில் அவர் மூலம் மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்டவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் இருந்தால் அந்த நோய் கிருமிகளை அவரது குறிப்பிட்ட நாட்களுக்குள் அவரது உடலே அழித்துவிடும். எனவேதான் சமூக விலகல் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோய் பரவாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும். மற்றவர்களுக்கும் பரவாது என்று கூறுகிறார்கள்.