/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/feb51319-2316-44ac-aa5b-5eab896d5eb7.jpg)
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். பெற்றோர்களும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
கரோனா காலத்தில் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த பதாகைகளை மாணவர்கள் கையில் வைத்திருந்தனர். மேலும் தமிழக அரசு 80 மதிப்பெண் அரையாண்டு மதிப்பெண் அடிப்படையிலும், 20 சதவீத மதிப்பெண் வருகைப்பதிவு அடிப்படையிலும் வழங்கி அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்தனர் மாணவர்களும் பெற்றோர்களும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)