அரியலூர் நகராட்சி துணைத் தலைவருக்கான தேர்தல் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், அதிமுகவைச் சேர்ந்த 8வது வார்டு ராஜேந்திரன், 9வது வார்டு மகாலட்சுமி, 10வது வார்டு இன்பவல்லி, 11வது வார்டு முகமது இஸ்மாயில், 13வது வார்டு வெங்கடாஜலபதி, 17வது வார்டு ஜீவா மற்றும் 12வது வார்டு மதிமுக கவுன்சிலர் மலர்கொடி ஆகிய 7 பேர் மட்டுமே வருகை தந்திருந்தனர்.
திமுக கவுன்சிலர்கள் மற்றும் ஆதரவு கவுன்சிலர்கள் உள்பட 11 பேர் கூட்டத்திற்கு வருகை தரவில்லை. மதியம் 2.30 மணி முதல் 3 மணி வரை வேட்பு மனுத்தாக்கலுக்கான நேர அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் போதிய கவுன்சிலர்கள் வராததால், துணைத் தலைவர் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.