கோணி சாக்கில் படுத்திருந்த 90 வயதான 'மரம் கருப்பையா'வுக்கு உதவிய தன்னார்வலர்கள்..! 

Ariyalur 'maram karuppaiya' got help from trust

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 4 லட்சம் மரக் கன்றுகளை வைத்து அரியலூர் மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 'மரம்' கருப்பையா. இவரைப் பற்றி அறிந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள உதவிகளை, சவுதி அரேபியாவில் உள்ள (சகாயம் தலைமையிலான) 'மக்கள் பாதை' அமைப்பின் சார்பில் நவீன வசதியுடன் கூடிய, கட்டில் படுக்கை வசதி ஏற்படுத்தி தந்தனர்.

இந்நிகழ்ச்சியில் 'மரம்' கருப்பையா குடும்பத்தினர், அவரது மகன் செங்கமலம் மற்றும் அவரது மகள்கள் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் செய்திருந்தார். சவுதியில் உள்ள சகாயம் 'மக்கள் பாதை' அமைப்பைச் சார்ந்த ஒருங்கிணைப்பாளர் தாமஸ் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள உதவிகளை மரம் கருப்பையா குடும்பத்தினரிடம் வழங்கினார். மரம் கருப்பையா கோணி சாக்கில் படுத்திருந்தார். அவருக்கு நவீனப் படுக்கை கட்டில் வசதி தன்னார்வலர்களால் வழங்கப்பட்டதை அறிந்து கள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Ariyalur
இதையும் படியுங்கள்
Subscribe