அரியலூர் மாவட்டம் தென்கரையில் கீழராமநல்லூரில் இருந்து மேலராமநல்லூருக்கு கொள்ளிடம் ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.
கீழராமநல்லூரில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 30 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 20 பேரில் 10 பேர் ஆற்றின் நடுவே மணல் திட்டில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் மீதமுள்ள 10 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று, வந்த நிலையில் 10 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால், கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு நீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலராமநல்லூர் மற்றும் கீழராமநல்லூர் கிராம மக்கள் படகு போக்குவரத்தை நம்பியே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு ஏரியில் மூழ்கி இரு பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.