அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்ற கூலித் தொழிலாளி தினமும் மது அருந்திவிட்டு மனைவி மற்றும் தனது தாயுடன் தகராறு செய்துள்ளார்.
கடந்த புதன்கிழமையும் இதேபோல் தகராறு செய்ததால் அவரது தாய் செல்வி, மனைவி சுகுணா ஆகியோர் ராஜசேகரை கட்டிவைத்து காதில் பூச்சி மருந்தை ஊற்றியதாகவும், இதில் அவர் வலி தாங்க முடியாமல் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக குடும்பத்தில் உள்ள அனைவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.