அரியலூர் மாவட்டம், உஞ்சினி அருகே உள்ளது அய்யனார் பெரிய ஏரி. இந்த ஏரியில்ஆதி குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 15 வயது சஞ்சய் மற்றும்13 வயது லட்சுமணன் இருவரும் குளிப்பதற்காக ஏரியில் இறங்கியுள்ளனர். நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் தத்தளித்து உள்ளனர்.
அந்தநேரத்தில் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் இவர்கள் தண்ணீரில் தத்தளித்து கதறியது யாருக்கும் கேட்காமல்போய்விட்டது, இதனால்இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். சில மணி நேரம் கழித்து அவர்கள் இருவரையும் காணவில்லை என்று அவர்களது குடும்பத்தினர் தேடியுள்ளனர். அப்போது மாணவர்கள் இருவரும் ஏரிக்கு குளிக்க சென்றதாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். அதையடுத்து ஊர் மக்கள் பதறியடித்து, ஓடி போய் ஏரியில் இறங்கி தேடி உள்ளனர். ஆனால், அவர்களால்இருவரையும் சடலமாகவேமீட்க முடிந்துள்ளது. மேலும் இதே ஏரியில் கடந்த ஆண்டு ஒரு மாணவர் நீச்சல் தெரியாமல் குளிக்கச் சென்று தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உஞ்சினி ஊர் மக்கள் கிராமத்து இளைஞர்கள் கடந்த காலங்களில் ஏரிகளிலும், குளங்களிலும், ஆறுகளிலும் ஓடைகளிலும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே அவ்வப்போது சென்று சிறிதளவு தண்ணீர் இருக்கும் போதே பெற்றோர்கள் உறவினர்கள் உதவியுடன் நீந்தப் பழகிக் கொள்வார்கள்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
காலப்போக்கில் கிராம இளைஞர்கள் தண்ணீரில் நீந்துவதை மறந்து போய்விட்டனர். எனவே பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே பள்ளிக்கூடங்களில் நீச்சல் பயிற்சியையும் ஒரு பாடமாகவைத்து சொல்லித்தர வேண்டும். அதன்மூலம் வருங்காலத்தில் மாணவ-மாணவிகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் வருங்கால தலைமுறையை காப்பாற்ற முடியும் என்கிறார்கள் உஞ்சினி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள்.