பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக  தவறான செய்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக தவறான செய்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனஅரியலூர் மாவட்டஆட்சியர் மு.விஐயலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அந்த அறிக்கையில்,

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி கிராமத்தில் 18.04.2019 அன்று இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளை தொடர்ந்து காவல் துறை மற்றும் வருவாய் துறை அந்த கிராமத்தில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகிறனர்.

ப்

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்டோர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அரியலூர்; மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் காவல்குழு பாதுகாப்பும், ரோந்து அலுவல் நியமிக்கப்பட்டும் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.

ப்

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மோதலினால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொது மக்களின் சேதமடைந்த வீடுகளின் விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கபட்ட நபர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொன்பரப்பி கிராமத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி கிராமத்தில் அமைதியான சூழல் நிலவி வருகிறது.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில்; தவறான மற்றும் உண்மைக்கு புறப்பான செய்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என தெரிவித்துள்ளார்.

ariyalur district senthurai
இதையும் படியுங்கள்
Subscribe