கேபிள் டிவி ஒயர்களை அகற்ற அரியலூர் ஆட்சியர் உத்தரவு! 

Ariyalur Collector orders removal of cable TV wires

தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் கேபிள்கள் மூலம் வீட்டுக்கு வீடு டிவி இயக்கப்படுகிறது. கேபிள் டிவி கான்ட்ராக்ட் எடுத்துள்ளவர்கள், கம்பம் நட்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் கேபிள் டிவியை கொண்டு செல்வதற்கு பதில் செலவை மிச்சப் படுத்துவதற்காக கிராம பகுதிகளில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பகுதியில் மின்சாரம் செல்லும் மின் கம்பிகளின் வழியே கேபிள் டிவி ஒயரையும் எடுத்து செல்கிறார்கள். இதன் மூலம் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன.

சமீபத்தில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் நகரில் வசிக்கும் தலைமை ஆசிரியை ஒருவர், தான் பணி செய்யும் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் தனது கணவருடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது பலமாக வீசிய காற்றினால், மின் கம்பியில் கட்டப்படிருந்த கேபிள் ஒயர் அறுந்து அவர் கழுத்தில் சிக்கி இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து பெரும் காயங்களுடன் உயிர் தப்பினர். இப்படி பல விபத்துகள் அடிக்கடி நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, டிவி கேபிள் ஒயர்கள் மின்சார கம்பத்தின் வழியாக கொண்டு செல்லக்கூடாது உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், மின் கம்பங்களில் விளம்பரப் பலகைகள் வைக்கக்கூடாது, இறுதி ஊர்வலத்தின் போது மாலைகளை தூக்கி மின்சார ஒயர்கள் மீது வீசக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். மேலும், தற்போது பொருத்தப்பட்டுள்ள விளம்பர பலகைகளையும் உடனடியாக அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Ariyalur
இதையும் படியுங்கள்
Subscribe