Advertisment

கரெண்ட் வருது... ஆனா செல்போன்ல கூட சார்ஜ் ஏறல... 20 நாள் ஆச்சி... கிராம மக்கள் வேதனை

The public

Advertisment

அரியலூர் கோட்டம் தேளூர் துணை மின் நிலையத்தில் உள்ள உயர் அழுத்த மின் மாற்றி அதாவது ட்ரான்ஸ்ஃபார்மர் கடந்த 20 நாட்களாக பழுதாகி கிடக்கிறது. இதிலிருந்து மின்சாரம் பெறும் 20 கிராமங்களுக்கு மேல் மிக மிகக் குறைந்த அளவு அழுத்தம் உள்ள மின்சாரம் தான் கிடைக்கிறது.

அதனால் வீட்டில்மின் விளக்கு எரிவது இல்லை,குடிநீர் மோட்டார்கள் போட முடியாமல் தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதி படுகிறார்கள்,விவசாய மோட்டார் இயக்க முடியாமல் விவசாயமும் பாழ்பட்டுக் கிடக்கிறது, செல்போன் கூட சார்ஜ் செய்ய முடியாத நிலையில் பொது மக்கள் உள்ளார்கள்.

இது தொடர்பாக தென்னூர் தலைமைப் பொறியாளருக்கு அலுவலக ரீதியாக தகவல் அனுப்பி 15 நாட்கள் ஆகிவிட்டது.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மிகுந்த அவதிக்குள்ளாகி இந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 20 கிராம மக்கள் துன்புற்று இருக்கிறார்கள். விரைவில் சரி செய்ய வேண்டும் என இந்தக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

Ariyalur Electricity
இதையும் படியுங்கள்
Subscribe