/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/me_1.jpg)
அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் வசித்து வரும் தையல்கலைஞர் சேகர்.தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாகத் தினசரி தங்களது வருமானம் கேள்விக்குறியாகி விட்ட போதிலும் கொரோனாவால் பாதிக்கப்படாத வண்ணம் தங்களால் ஆன பங்களிப்பை அளித்து வருகிறார்கள்அப்பா சேகர், தையல் கலைஞர்களான மகன் கோகுல்நாத்.
இது குறித்து இவர்கள் கூறுகையில், ‘’ஒவ்வொருவரும் கொரோனா பாதிப்பிலிருந்து மீள தங்களால் ஆன உதவியைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் எங்களால் ஆன சிறு பங்களிப்பாகத் தையல்கூலி பெற்றுக்கொள்ளாமல் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்க முன்வந்திருக்கிறார்கள். அவர்கள், எங்களை அணுகினார்கள் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நாங்கள் முகக் கவசத்தைத் தயாரித்துத் தருகிறோம்’’ என்றனர்.
மேலும், அவசரக் காலத்தில் செய்யக்கூடிய சிறு உதவியும் பேருதவியாக இருக்கும்.எங்களைப் போன்ற தையல் கலைஞர்களும் இதுபோன்ற உதவிகளைச் செய்ய முன்வந்தால் அனைவருக்கும் முகக் கவசம் கிடைக்க வழிவகை செய்ய முடியும் எனவும் தங்களது கருத்தைப் பதிவு செய்தனர்.
ஒவ்வொரு மனிதரும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக் கவசம் அணிந்து வருவது இப்போதைக்கு மிக மிகமுக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால்,சாலைகளிலும் நடை பாதைகளிலும் நடந்து செல்பவர்கள் வாகனங்களில் செல்பவர்கள் முகக் கவசம் இல்லாமல் செல்வதைப் பார்க்கிறோம்.வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது முகக் கவசம்.
எல்லோருக்கும், அது கிடைப்பதில் மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே, அந்த முகக்கவசத்தைஇலவசமாகத்தைத்துக்கொடுக்கிறார்கள். மேற்படி, அப்பாமகன்இரு தையற் கலைஞர்கள்.இவர்களைப் போல பலரும் முன்வந்து உதவி செய்தால் நாட்டுமக்கள் அனைவருக்கும் முகக் கவசம் எளிதில் கிடைக்கும். அதைச் செய்ய முன்வருவார்களா ? தையல் கலைஞர்கள்?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)