Skip to main content

அரிக்கொம்பனை மதிக்கெட்டான்சோலையில் விடக்கோரி வழக்கு

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Arikombanai Madiketan desert case

 

கடந்த 7 நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் புகுந்த காட்டு யானையான அரிக்கொம்பன் சில நாட்களாகவே வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் யானையானது கம்பம் அருகே உள்ள சண்முகா அணை பகுதியில் புகுந்தது. தொடர் முயற்சியின் பலனாக ஒரு வழியாக மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை பிடிக்கப்பட்டது.

 

அரிக்கொம்பன் யானை தற்பொழுது ஒரு வழியாக பிடிபட்டு களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. இருப்பினும் கேரளாவில் 8 பேரை கொன்ற யானையை களக்காடு பகுதியில் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து களக்காடு பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

இந்நிலையில் அரிக்கொம்பன் யானையை மதிக்கெட்டான்சோலையில் விட வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். கேரளாவை சேர்ந்த ரபேக்கா ஜோசப் என்பவர் தேனி மாவட்டம் மதிக்கெட்டான்சோலை பகுதியில் அரிக்கொம்பன் யானையை விட வேண்டும். அது கேரளாவை சேர்ந்த பகுதி என்பதாலும், அரிக்கொம்பனுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட பகுதியாக இருப்பதாலும் அங்கே விடுவது தான் சரியானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வீட்டில் தூங்கிய தொழிலாளியை மிதித்து கொன்ற யானை - சத்தியமங்கலத்தில் பயங்கரம்!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
An elephant trampled a sleeping laborer to death at Sathyamangalam

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு காட்டு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சில சமயம் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை ஊருக்குள் புகுந்து தொழிலாளியை மிதித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த தொப்பம்பாளையம், மணல்மேடு அருகே உள்ள தூரம் மொக்கை என்ற கிராமம் அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (44). ஆடு மேய்த்தல் மற்றும் மீன் பிடித்தல் தொழில் செய்து வந்தார். இவர் தனது தாய் தந்தையுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு கனகராஜ் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தாய், தந்தையுடன் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று தூரம் மொக்கை கிராமத்துக்குள் புகுந்து வந்தது. அப்போது கனகராஜ் குடிசை வீட்டுக்குள் நுழைந்த யானை அங்கு தூங்கிக் கொண்டிருந்த கனகராஜ் நெஞ்சுப் பகுதியில் ஓங்கி மதித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு கனகராஜ் தாய், தந்தை திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது தங்களது மகனை யானை மிதிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அந்த யானை குடிசை விட்டு வெளியேறி அருகே உள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றது. இதனால் கனகராஜன் தாய், தந்தை அதிர்ஷ்டவசமாக தப்பினர். யானை மிதித்ததில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கனகராஜை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலன் இன்றி சிறிது நேரத்தில் கனகராஜ் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  யானை மிதித்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தேக்கடி மதகில் சிக்கிய காட்டு யானை

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
A wild elephant trapped in the Thekkady Dam

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் தேக்கடி மதகுப் பகுதியில் காட்டு யானை ஒன்று எதிர்பாராத விதமாக சிக்கிக்கொண்டது. அதை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்ட நிலையில், யானை தானாகவே நீந்தி வந்து கரையைச் சேர்ந்தது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் தண்ணீர் தேக்கடி ஏரியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டு, அந்த கால்வாய்கள் மூலம் தண்ணீர் தமிழகத்திற்கு வருகிறது. இந்த சூழலில் நேற்று இரவு 20 வயது மதிக்கத்தக்க காட்டு யானைனது தவறி கால்வாய்க்குள் விழுந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக நீர்வளத் துறையினர் யானையை மீட்பதற்காக கால்வாயில் நீரோட்டத்தை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.இதனால் தமிழகத்திற்குத் திறந்து விடப்படும் 1200 கன அடி தண்ணீரை நிறுத்தி உள்ளனர். தொடர்ந்து கால்வாயில் நீர் அழுத்தம் குறைந்தது. இதையடுத்து யானையானது கால்வாயில் இருந்து தானாக நீந்தி கரையேறி வனத்திற்குள் சென்றது.