பெண் காவலரின் சட்டையை பிடித்து இழுத்து தகராறு; இரு வாலிபர்கள் கைது!

d

தர்மபுரியில்பணியில் இருந்த பெண் தலைமைக் காவலரை சட்டையைப் பிடித்து இழுத்துத்தாக்கிய குடிபோதை வாலிபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி நகர காவல்நிலையத்தில் பெண் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் பார்த்தசாரதி. இவர், பிப். 12, 2023ம் தேதி, நெசவாளர் காலனி பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.அப்போது அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து இரண்டு வாலிபர்கள் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டி வருவதாகவும், அவர்களை தடுத்து நிறுத்தும்படியும் அவருக்கு அலைபேசியில் தகவல் கிடைத்தது.

இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இரண்டு பேரையும் பார்த்தசாரதி தடுத்து நிறுத்தினார். ஆத்திரம் அடைந்த அவர்கள், பார்த்தசாரதியின் சட்டையைப் பிடித்து இழுத்து ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, அவரை தாக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இது குறித்து தலைமைக் காவலர் பார்த்தசாரதி அளித்த புகாரின்பேரில் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் பிடித்துவிசாரித்தனர். விசாரணையில், அவர்களில் ஒருவர் தர்மபுரி கீழ் மாட்டுக்காரனூரைச் சேர்ந்த காவேரி மகன் தனசேகரன் (24) மோட்டார் சைக்கிள் மெக்கானிக் என்பதுதெரியவந்தது. மற்றொருவர்முருகன் மகன் அப்பு (25)லாரி ஓட்டுநர் என்பதுதெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

dharmapuri police
இதையும் படியுங்கள்
Subscribe