/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/n2242.jpg)
கிருஷ்ணகிரியில் பழனிபாபா வரலாறு குறித்த பொது விளக்கக் கூட்டத்தில் தகராறு வெடித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள பொத்தூரில் தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பழனிபாபா பேரவை சார்பில் மறைந்த பழனிபாபாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தாஜ் என்ற நபர் அடிக்கடி எழுந்து சென்றதால் அவரை ஓரிடத்தில் அமருமாறு மெஹபூர் என்ற நபர் சொன்னார் எனக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் தாஜ் மற்றும் அவரது நண்பரைஅங்கு இருந்தவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் ஓசூர் அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)