Advertisment

‘பாயசத்திற்கு சண்டையா...!’ - கலவர பூமியாக மாறிய நிச்சயதார்த்த நிகழ்வு 

Argument that payasam is not right in the engagement ceremony

சீர்காழிஅருகேபாயசம்சரியில்லை என்று கூறி இரு தரப்பினரும் கடுமையாகத் தாக்கிக் கொண்டதுஅப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் திருமண நிச்சயதார்த்த விழா ஒன்று நடைபெற்றுள்ளது. விழாவை முடித்துவிட்டு அனைவரும் சாப்பிட அமர்ந்துள்ளனர். அப்போதுசாப்பாட்டில்பாயசம்சரியில்லை என்று கூறி பெண் வீட்டார் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மணமகன்வீட்டார்பெண் வீட்டாரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவதாம் முற்றிப்போக இரு வீட்டாரும் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழிபோலீசார்இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திசமாதானம்செய்து அனுப்பி வைத்தனர்.நிச்சயதார்த்தத்தில்பாயசத்திற்காகஅடித்துக்கொண்டசம்பவம் விழாவிற்கு வந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

engagement sirkazhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe