Advertisment

மகனின் உடல்நிலையால் வாக்குவாதம்...சோகத்தில் முடிந்த கணவன்-மனைவி சண்டை!

The wife who slammed the door in anger ... The argument ended in tragedy

திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன். இவரது மனைவிசரண்யா (36).இவர்களுக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், பிரஜித் (7), ரெனிஸ் (3) என்ற மகன்கள் உள்ளனர். கோவையில் பணியாற்றிவரும் லோகேஸ்வரன், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சி கே.கே.நகரில் உள்ள தன்னுடைய சொந்த வீட்டிற்கு வந்துள்ளார்.

Advertisment

லோகேஸ்வரன் மகன் பிரஜித்துக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.மகனின் உடல்நிலை குறித்து கணவன் - மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் லோகேஸ்வரன் சரண்யாவை திட்டியுள்ளார்.இதனால் கோபமடைந்த சரண்யா, வீட்டு மாடிக்குச் சென்று கதவை தாழிட்டுக்கொண்டுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த லோகேஸ்வரன், கதவைத் தட்டியபோது திறக்காத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

Advertisment

சரண்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து லோகேஸ்வரன் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அப்போது சரண்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.இதனால் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த கே.கே.நகர் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Husband and wife incident trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe