
கும்மிடிப்பூண்டி அருகே மது வாங்கித்தர மறுத்ததால் தகராறில்ஈடுபட்டமனைவியை கணவர் கொன்று மாந்தோப்பில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பாதிரிவேடுஅருகே உள்ளது கரடிப்புத்தூர். அங்குள்ள உள்ள தனியார் தோப்பில் கடந்த 27 ஆம் தேதி பெண் ஒருவரின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சடலத்தைக் கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் மாந்தோப்பில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது லட்சுமி என்பது தெரியவந்தது. இதில் லட்சுமியின் கணவர் தர்மய்யா என்பவரை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு தர்மய்யா ஆந்திராவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரைப் பிடித்து மனைவியின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தியதில், ''எனக்கும் மனைவி லட்சுமிக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது.ஒன்றாகச் சேர்ந்து இருவரும் அடிக்கடி மது அருந்துவோம்.கடந்த 22 ஆம் தேதி லட்சுமிக்கு மது வாங்கித்தராததால் ஆத்திரத்திலிருந்தார். இதனால் அடுத்த நாள் எனக்கு சாப்பிடுவதற்கு உணவு எதுவும் செய்து தரவில்லை. இதனால் எங்களுக்குள் நடைபெற்ற சண்டையில் கையிலிருந்த மண்வெட்டியால் தாக்கி மனைவி லட்சுமியைகொலை செய்து மாந்தோப்பில் குழி தோண்டி புதைத்து விட்டேன்” என பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். கணவர் தர்மய்யாவின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)