
தேனியில் திருமண நாளுக்கு முன்பு மணமகனின் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் தந்தையே மகனை அடித்துக் கொன்றது தெரிய வந்துள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த அய்யாசாமி என்பவரின் இரண்டாவது மகனுக்கு திருமணம் முடிந்து அனைவரும் வீட்டுக்கு சென்றிருந்தனர். அப்பொழுது மூத்த மகனான பூவேந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். திருமணமாகாத விரக்தியில் அண்ணன் பூவேந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை கூறியதோடு அவசரமாக உடலைஅடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அவரின் தலையில் காயம் இருந்தது தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில், இது குறித்து போலீசார் அய்யாசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர். தனக்கு திருமணம் செய்து வைக்காமல் தம்பிக்கு திருமணம் செய்து வைத்ததால் பூவேந்திரன் தன்னுடன்வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அப்போது இரும்பு கம்பியால் தாக்கியதில் பூவேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அய்யாசாமி ஒப்புக் கொண்டார். அதனையடுத்து அய்யாசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)