/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sakthivel_1.jpg)
திருப்பூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
திருப்பூரில் நடைபெறும் சிறு குறு தொழில் மாநாட்டில் பங்கேற்க பல்லடம் வழியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்த போது காவலர்கள் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த திருப்பூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில் வேல் தனது காரை சாலையில் நிறுத்த முயன்ற பொழுது அங்கு இருந்த காவலர் தடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவலருக்கும் செந்தில்வேலுக்கும் வாக்குவாதம் நடந்தது.
இது குறித்து வெளியான வீடியோ பதிவில் காவலர் "10 நிமிடம் உங்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்துங்கள் எங்களை எங்கள் பணியை செய்ய விடுங்கள்" என கூற "நான் எனது பணியை செய்யட்டுமா எனது கட்சிக்காரர்களை வர சொல்லவா? யாருன்னு தெரிந்து பேசுங்கள்" எனக் கூறினார். அதற்கு பதில் அளித்த காவலர் "யாராக வேண்டுமானாலும் இருங்கள் தயவு செய்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்" எனக் கூறினார். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)