Advertisment

''மாமூல் தராததால் சோதனை செய்றீங்களா?'' - அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர்

publive-image

Advertisment

மயிலாடுதுறையில் பிரபல டீக்கடை ஒன்றில் நகராட்சி சுகாதாரத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்ட நிலையில் திமுக பிரமுகர் அருகில் உள்ள கடைகளில் விதிகள் பின்பற்றப்படாத நிலையில் இங்கு மட்டும் ஏன் சோதனை செய்கிறீர்கள் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை கடைவீதி பகுதியில் அமைந்துள்ள பிரபல டீக்கடையான குரு டீக்கடையில் நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் சீனிவாசன் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர். இங்கு தயாரிக்கப்படும் பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவு பண்டங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யில் தயாரிப்பதாகவும், செய்தித்தாளில் எண்ணெய் பண்டங்களை வைத்துக் கொடுப்பதாகவும் கூறி நகராட்சிஅதிகாரிகள் கடைக்குபூட்டு போட்டு சீல் வைப்பதாகத்தெரிவித்தனர்.

அப்பொழுது அங்கு வந்த புளியந்தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர் அமர்நாத் என்பவர் டீக்கடைக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். இந்த பகுதியில் எத்தனையோ கடைகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இந்த கடை மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கிறீர்கள். மாமூல் தராததனால் இப்படி செய்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

inspection Mayiladuthurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe