Skip to main content

''மாமூல் தராததால் சோதனை செய்றீங்களா?'' - அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர்

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

"Are you conducting a search because you don't give Mamul?" - DMK leader who argued with the officials

 

மயிலாடுதுறையில் பிரபல டீக்கடை ஒன்றில் நகராட்சி சுகாதாரத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்ட நிலையில் திமுக பிரமுகர் அருகில் உள்ள கடைகளில் விதிகள் பின்பற்றப்படாத நிலையில் இங்கு மட்டும் ஏன் சோதனை செய்கிறீர்கள் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மயிலாடுதுறை கடைவீதி பகுதியில் அமைந்துள்ள பிரபல டீக்கடையான குரு டீக்கடையில் நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் சீனிவாசன் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர். இங்கு தயாரிக்கப்படும் பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவு பண்டங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யில் தயாரிப்பதாகவும், செய்தித்தாளில் எண்ணெய் பண்டங்களை வைத்துக் கொடுப்பதாகவும் கூறி நகராட்சி அதிகாரிகள் கடைக்கு பூட்டு போட்டு சீல் வைப்பதாகத் தெரிவித்தனர்.

 

அப்பொழுது அங்கு வந்த புளியந்தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர் அமர்நாத் என்பவர் டீக்கடைக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். இந்த பகுதியில் எத்தனையோ கடைகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இந்த கடை மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கிறீர்கள். மாமூல் தராததனால் இப்படி செய்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'காரா... பாரா...' - 900 லிட்டருடன் சிக்கிய இருவர் கைது!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
'car... bar...'- Two people stuck with 900 litres

புதுச்சேரியில் இருந்து மூட்டை மூட்டையாக காரில் சாராயம் கடத்தி வந்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காரில் ரகசியமாக சாராயம் கடத்தி வருவதாக மயிலாடுதுறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் செம்பனார்கோவில் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது நிற்காமல் சென்ற கார் ஒன்றைத் துரத்திச் சென்ற போலீசார் காரை சோதனையிட்டதில், காரில் சாராயம் மூட்டை மூட்டையாக கடத்திக் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

உடனே சுதாரிக்கொண்ட கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிய நிலையில் காரில் இருந்த முருகேசன், சுமன் ஆகிய இரண்டு இளைஞர்களைப் போலீசார் கைது செய்தனர். மொத்தமாக அவர்களிடம் இருந்து 900 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. யாருக்காக சாராயம் கடத்தி வரப்பட்டது என்பது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

முல்லைப் பெரியாறு அணையில் அதிகாரிகள் ஆய்வு!

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
Mullai Periyar dam officials inspection

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே 336 மீட்டரில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை வைத்தது. இது தொடர்பாகச் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்தது. அதில், “தற்போதுள்ள அணைக் கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆனதால் பாதுகாப்பு கருதி புதிய அணைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய அணைக் கட்டிய பின்னர் தமிழகத்திற்கு தற்போது வழங்குவதைவிட அதிக தண்ணீரை வழங்க முடியும்” எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த விண்ணப்பம் தொடர்பாக நேற்று (28.05.2024) மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனைக்காகப் பட்டியலிடப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான டெல்லியில் நேற்று நடக்க இருந்த கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதே சமயம் முல்லைப் பெரியாரில் புதிய அணை, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்ட தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்கள் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய உள்ளது எனத் தமிழ்நாடு நீர்வளத்துறைத் தெரிவித்துள்ளது. மத்திய நீர்வள தலைமை பொறியாளர் தலைமையிலான குழு இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது. புதிய அணை கட்ட கேரள அரசு அனுமதி கோரியது சர்ச்சையான நிலையில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்று கேரள அரசு கூறி வந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது. அதே சமயம் பேபி அணைப் பகுதியைப் பலப்படுத்தி அணையின் நீரைமட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது.

அந்த தீர்ப்பின் அடிப்படையில் அணையைக் கண்காணிப்பதற்காக மூன்று பேர் மற்றும் ஐந்து பேர் கொண்ட இரு குழுக்களை உச்சநீதிமன்றம் நியமித்திருந்தது. இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூவர் குழுவில் தொழில்நுட்ப வல்லுநர்களும் இணைக்கப்பட்டது. இக்குழு அணையின் பருவகால சூழலின் அடிப்படையில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி (18.03.2024) ஆய்வுக் குழு அணையை ஆய்வு செய்ய முடிவு செய்திருந்தது. அச்சமயம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.