Skip to main content

பயனற்ற இலவசங்களால் உரிமைகளை இழக்க போகிறோமா?

Published on 22/02/2018 | Edited on 22/02/2018
mixi

 

மக்களுக்கு இலவசமாக தரும் பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் கமிஷன் அடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இலவசங்களால் மக்களுக்கு கிடைத்த லாபத்தைவிட, அதிகாரத்தில் இருப்பவர்கள் அடித்த கொள்ளை பல மடங்கு அதிகமாகும்.

 

 மிக்சி, கிரைண்டர், மின்விசிறி  திட்டத்தில், வழங்கப்பட்ட பொருட்கள் அனைத்துமே சில மாதங்களிலேயே காயலான் கடைக்கு போய்விட்டது. இதற்கு காரணம் பொருட்களை தயாரிக்க தொழிற்சாலைகள் கூட இல்லாத  நிறுவனங்கள் ஏன், பருப்பு வியாபாரம் செய்கிறவர்களுக்கு அதிமுக அரசு டெண்டர் கொடுத்ததுதான். கோவையில் டெண்டர் கிடைக்காமல் கிரைண்டர் சங்கத்தினர் அரசுக்கு எதிராக  போராட்டத்தில் ஈடுபட்டும் பலனளிக்கவில்லை. காரணம் கமிஷன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட அனுமதிதான் முக்கிய காரணம். 

 

டெண்டர் பெற்றவர்கள் சீனாவில் இருந்து மலிவுவிலையில் இறக்குமதி செய்து ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டி, மஞ்சள் நிற அட்டை பெட்டியில் அடைத்து அரசுக்கு சப்ளை செய்துள்ளனர். இதில், பல பொருட்கள் பயனாளிகள் அட்டை பெட்டிகளை திறக்கும்போதே உடைந்த நிலையில் இருந்தன. அப்படியே நன்றாக இருந்தாலும் மிக்சி, கிரைண்டர், பேன் போன்றவை 2,3 நாட்களிலேயே ரிப்பேர் ஆகி, காயலான் கடைக்கு ரூ.100க்கும் 200க்கும் எடைக்கு விற்கப்பட்டுவிட்டன. இந்த டெண்டரில் மட்டும் ரூ.8 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 2016 ல் குற்றம் சாட்டினார். 

 

 இந்நிலையில் தற்போது பழைய இரும்புக்கடையில் குவியல் குவியலாக வைக்கப்பட்டுள்ள இலவச கிரைண்டர்களை பார்க்கும் போது , தரமற்ற பொருட்களை இலவசமாக மக்களுக்கு  கொடுத்தால் வாக்கு வங்கி பெருகி மீண்டும் மக்களை கோமாளியாக்கலாம் என்பதை நிரூபிப்பதைப்போல் உள்ளது   .

 

இன்னும் இலவசத்திற்கு ஆசைப்பட்டும், ஓட்டுக்கு பணம் பெற்றும் , நாம்,  நம்  உரிமைகளை இழக்க போகிறோமா? என்பதை காலம் தான் முடிவு செய்யும்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் இணையதள முகவரியை மாற்றிய தமிழக அரசு!

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் (Right To Education Act - 2009) கீழ் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் சென்ற ஆண்டு தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் இணையதளத்தில் விண்ணப்பித்து வந்த நிலையில் , தற்போது புதிய இணையதள முகவரியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான இணையதள முகவரி : http://rte.tnschools.gov.in/tamil-nadu ஆகும்.  இந்த இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான வழிமுறைகள் தமிழில் குறிப்பிட்டுள்ளனர். 

 

rte



விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
1. குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் .
2. குழந்தையின் பிறப்பு சான்றிதழ்.
3. பெற்றோர் அல்லது குழந்தையின் காப்பாளரின் இருப்பிட சான்றிதழ் (குடும்ப அட்டை , ஆதார் அட்டை).
4. வருமான சான்றிதழ்.
5. சாதி சான்றிதழ்.

 

rte



தமிழக பள்ளிக்கல்வி துறை கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் இணைய தள முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

 

rte



மேலும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தில் யார்? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? நலிவடைந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் இந்த சட்டத்தின் கீழ் தங்கள் குழந்தைகளை சுயநிதி பள்ளிகள் தவிர மற்றும் அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும் ஏதாவது ஒன்றில் சேர்க்கலாம். இதற்கான விண்ணப்பம் தொடங்கிய நாள் : 22/04/2019 , விண்ணப்பிக்க கடைசி நாள் : 18/05/2019.  அதே போல் எங்கு போய் விண்ணப்பிப்பது ? தமிழக அரசு இ சேவை மையங்கள் , மாவட்ட கல்வி அலுவலகங்கள் ,தனியார் இண்டர்நெட் சென்டர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப கட்டணங்களை அரசுக்கு எதுவும் செலுத்த தேவையில்லை. அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சுமார் 25% இட ஒதுக்கீட்டை கட்டாயம் அளிக்க வேண்டும். மேலும் இந்த சட்டத்தின் கீழ் சேரும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்வி கட்டணத்தை சமந்தப்பட்ட பள்ளிகள் வசூலித்தால் தமிழக பள்ளிக்கல்வி துறையில் பெற்றோர்கள் புகார் அளிக்கலாம். அதே போல் (LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை ) கல்வி கட்டணம் முற்றிலும் இலவசமாகும். இதற்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

முதல் தகவல் அறிக்கையை மக்களே பதிவு செய்யலாம் !

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

தமிழக காவல்துறை சார்பாக "TAMIL NADU POLICE CITIZEN SERVICES" என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தமிழக மக்கள் தங்கள் பகுதிகளில் ஏதேனும் குற்றங்கள் நடந்தால் அவைகளை இந்த செயலி மூலம் முழு விவரங்களை பதிவிட்டால் உடனடியாக FIR பதிவு செய்து விடலாம். மேலும் தனது முதல் தகவல் நிலையை இந்த செயலியில் (FIR STATUS , CSR STATUS ) அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு இளைஞர்களும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன். 
 

rti online apply

குற்றவாளிகளை உடனே கண்டறிய இந்த செயலி பயனுள்ளதாக மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்த முதல் தகவல் அறிக்கையில் கொள்ளை நடந்தாலோ  , வாகன திருட்டு, அதிக வட்டி வசூலித்தல் , சட்டவிரோத செயல் போன்ற சம்பவங்கள் எவையேனும் நடந்தேறினால் இந்த செயலியை பயன்படுத்தி உடனடியாக முதல் தகவல் அறிக்கையை மக்களே பதிவு செய்யலாம். தமிழக காவல்துறை சார்பாக இத்தகைய செயலி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
 

 பி . சந்தோஷ் , சேலம் .