/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bus1.jpg)
நடத்துடனர் இல்லாமல் ஓட்டுனரை மட்டும் வைத்து தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படுகிறதா என தமிழக அரசு போக்குவரத்து துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிஐடியு-வுடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார் தொடர்ந்துள்ள வழக்கில், பயணிகள் பேருந்துகளில் நடத்துனர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் நடத்துனர் இல்லாமல் ஓட்டுனரை மட்டும் பல பேருந்துகள் இயக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக பயணிகளை ஏற்றப்படுவதை தடுப்பது, பேருந்துகளை சுத்தமாக பராமரிப்பது போன்ற பொறுப்புகள் நடத்துனருக்கு உள்ள நிலையில், நடத்துனரே இல்லாமல், நடத்துனரின் பணியை ஓட்டுனருக்கே கொடுத்து பஸ்கள் இயக்கப்படுவது சட்டவிரோதமாகும் என்பதால், இதை தடுக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சென்னை மாநகரிலும், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளிலும் நடத்துனர் இல்லாமல் இயக்கப்படுகிறதாஎன அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)