மத்திய தொல்லியல் துறை தற்போது 13 முக்கிய அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோவா சரகத்தில் பணியாற்றிவந்த அமர்நாத் ராமகிருஷ்ணனைசென்னைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கீழடியில் முதல் இரண்டு கட்ட ஆய்வு நடைபெற்றபோது தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்தார். பின்னர் அவர் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாறுதல் செய்யப்பட்டார். தற்போது கீழடி ஆய்வு அடுத்தக் கட்டத்திற்குச் சென்றுள்ள நிலையில், இவரது வருகை மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.