பரக

Advertisment

தமிழகத்தில் நடப்பாண்டில் ஏழு இடங்களில் தொல்லியல் துறை அகழ்வாய்வு நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள், சிவகளை, கங்கைகொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, பெரும்பாலை, துலுக்கர்பட்டி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இந்த அகழ்வாய்வு நடைபெற இருக்கிறது. மார்ச் மாதம் துவங்கும் இந்த அகழ்வாய்வு செப்டம்பர் மாதம் நிறைவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.