தொல்லியல் துறையில் பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆணையில் சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியை நீக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஆதிச்சநல்லூரில் நகரில் நடைபெற்ற ஆய்வு முடிவுகளை வெளியிடகோரியும், மீண்டும் அகழாய்வு நடத்தக்கோரியும் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நீதிபதி கிருபாகரன், எஸ்.சுந்தர் அமர்வில்மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆதிச்சநல்லூர் ஆய்வுஅறிக்கைகளை தாக்கல் செய்ய மேலும் எட்டு மாத காலம் அவகாசம் தேவை என குறிப்பிடப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் மத்திய அரசு ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவில்லை எனில் மாநில அரசுகள் ஆய்வு நடத்திக்கொள்ள அனுமதிக்குமா என கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் மாநில அரசு தரப்பில் கோரிக்கை வைத்தால்அனுமதி வழங்குவோம் என தெரிவித்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதையடுத்து நீதிபதிகள் அதை பிரமாணப்பத்திரமாகதாக்கல் செய்ய மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்துதொல்லியல்துறை தரப்பில் தமிழகத்தில் இதுவரை 26 இடங்களில் ஆய்வுநடத்தப்பட்டுள்ளது. ஓரிடத்திற்கான அகழ்வாராய்ச்சி முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் 25 இடங்களில் அகழாய்வு நடத்தியது குறித்து ஆய்வுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அங்கு கண்டெடுக்கப்பட்ட அகழாய்வு பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டனர். தொடர்ந்து மனுதாரர் தரப்பில் தமிழக தொல்லியல் துறையில் 35 இடங்களில் 25 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதில் அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில்சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது என சுட்டிக் காட்டப்பட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் அதிக அளவில் தமிழ் பிராமி எழுத்துக்களே உள்ளன ஆகையால் சமஸ்கிருதம் மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டதை இதை ஏற்க முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
ஆகவே தொல்லியல் துறையின் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற பகுதியை நீக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணைஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.