Aravindsamy in AIADMK banner; Panicked executives

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் நேற்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. இதில் சில இடங்களில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஆதரவாளர்களும், எடப்பாடி அணியை சேர்ந்த ஆதரவாளர்களும் மோதிக்கொள்ளும் நிகழ்வுகளும் ஏற்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர் பகுதியில் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். எம்.ஜி.ஆர் உடைய உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறிய அளவிலான பந்தல் அமைக்கப்பட்டு அதனை ஒட்டி வரவேற்பு பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது.

Advertisment

அந்த வரவேற்பு பேனர் ஒன்றில் எம்ஜிஆர் புகைப்படத்திற்குப் பதிலாக 'தலைவி' என்ற படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்த புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இது சமூக வலைதளங்களில் வெளியாகி கிண்டலுக்கு ஆளானது. உடனடியாக பதறியடித்த அந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் அரவிந்த்சாமி புகைப்படம் இருந்த இடத்தில் எம்ஜிஆரின் மற்றொரு அசல் படத்தை ஒட்டி விட்டு சென்றனர்.