
ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசியவர் ஒருகட்டத்தில், "அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை; எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவ குழந்தை. அந்தக் குறைப்பிரசவ குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர் தேவைப்பட்டார், அவர்தான் பிரதமர் மோடி” என தனது பேச்சில் குறிப்பிட்டார்.
அரசியல் ரீதியான ஆ.ராசாவின் பேச்சு, தனிப்பட்ட விமர்சனமாக முன்னெடுக்கப்பட்டு சமூகவலைதளத்தில் வைரலானது. அது திமுகவுக்கும், ஆ.ராசாவுக்கும் எதிரான விமர்சனங்களை உருவாக்கியது. இந்நிலையில், நேற்று (28.03.2021) பிரச்சாரத்தில் இதுகுறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒரு கட்டத்தில் கண் கலங்கினார். இந்நிலையில், இதுகுறித்து ஆ.ராசா தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, "எனது பேச்சால் முதல்வர் வருத்தமுற்றதாக செய்தித்தாள் வாயிலாக தெரிந்துகொண்டேன். இது தவறாக சித்திரிக்கப்பட்ட ஒரு பேச்சு. அரசியலுக்காக அல்லாமல் உண்மையாகவே அவர் வருத்தமுற்றிருந்தால் எனது மனம் திறந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)