அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனா? –சுவர் விளம்பரம் ஏற்படுத்திய டென்ஷன்

 Arakonam DMK candidate Jagathrakshana? -Tenward advertisements

வேலூர் மாவட்டம், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நேர்காணல் திமுகவில் மார்ச் 10ந் தேதி தான் நடந்து முடிந்தது. அதிமுகவில் மார்ச் 11ந் தேதி நடைபெற்று முடிந்தது.

அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுவதற்கு முன்பாகவே வேலூர் தொகுதிக்கு ஏ.சி.சண்முகம் தான் வேட்பாளர் என பிரச்சார நோட்டீஸ் ரெடி செய்து சமூக வளைத்தளங்களில் வெளியிட்டனர் அவரது ஆதரவாளர்கள். வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திமுகவின் கதிர்ஆனந்த் என நோட்டீஸ் வெளியானது அவரது ஆதரவாளர்களால்.

 Arakonam DMK candidate Jagathrakshana? -Tenward advertisements

இதையெல்லாம் மிஞ்சும் வகையில், ''அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன்'' என நெமிலி ஒன்றியத்தின் பலயிடங்களில் சுவர் விளம்பரம் செய்துள்ளனர் அப்பகுதி திமுக நிர்வாகிகள்.

''தலைமை அறிவிக்கும் முன்பாகவே விருப்பமனு அளித்தவர்களின் ஆதரவாளர்களே இன்னார் தான் வேட்பாளர்ன்னு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். விளம்பரம் செய்கிறார்கள். இதுதான் கட்சி தலைவருக்கும், கட்சி தலைமைக்கும் இவர்கள் தரும் மரியாதையா?'' என கேள்வி எழுப்புகின்றனர் திமுக, அதிமுக தொண்டர்கள்.

elections
இதையும் படியுங்கள்
Subscribe