Advertisment

அரக்கோணம் இரட்டைப் படுகொலை வழக்கு! - அடுத்தடுத்து நீதிமன்றத்தில் சரணடையும் இளைஞர்கள்..!

Arakkonam two youngsters passes away case one surrender in court

அரக்கோணம் அடுத்த சோகனூரில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் அர்ஜுன், சூர்யா என இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது சாதி மோதல், அரசியல் படுகொலை, தேர்தல் கொலை, குடிபோதையில் ஏற்பட்ட கொலை, தொழில் தகராறு எனப்பல்வேறு தகவல்கள் பரவிவருகிறது.

Advertisment

இந்த விவகாரத்தில் அதிமுக ஒ.செ பழனி மகனும், அதிமுக ஐடி விங் ஒ.செவுமான சத்யா உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவைர 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இந்நிலையில், ஏப்ரல் 19 ஆம் தேதி வேலூர் ஜே.எம் 5 நீதிமன்றத்தில் பெருமாள் ராஜபேட்டையைச் சேர்ந்த மூக்கன் என்கிற ராஜசேகர் சரணடைந்துள்ளார்.

Advertisment

இந்த கொலை விவகாரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், சாலைமறியல் செய்தபோது கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்த்தரப்பினர் ஒருவரின் நிலத்தில் இருந்த 300 மூட்டை நெல், டிராக்டர் போன்றவற்றுக்கு தீ வைத்து எரித்ததுக்கு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்படுகிறது. காவல்துறை அதனை அலட்சியப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

arakkonam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe