/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1037.jpg)
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரைச் சேர்ந்தவர் 35 வயதான கார்த்தி. இவர் மீது கொலை, கொலைமிரட்டல், ஆள்கடத்தல் என பல்வேறு வழக்குள் உள்ளன. கடந்தாண்டு கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, குண்டாஸ் வழக்கில் சிறையில் இருந்த கார்த்தி, கடந்த ஜூன் 3ஆம் தேதி ஜாமினில் வெளியேவந்தார்.
அரக்கோணம் கோலோச்சி அம்மன் கோவில் அருகில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு ஜூன் 6 ஆம் தேதி மதியம் வந்துள்ளார். அப்போது, அந்த வீட்டின் மாடியில் மதியம் 2 மணிவாக்கில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வீடு புகுந்து அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
பட்டப்பகலில் ரவுடி ஒருவரை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீஸார் பிரேதத்தைக் கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை முன் விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என அரக்கோணம் கிராமிய காவல்துறை உதவி ஆய்வாளர் கோகுல்ராஜ் தலைமையிலான போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)