அரக்கோணம் அருகே நடைபெற்ற 2 தலித் இளைஞர்கள் கொலையில் உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யவும்,பாமகவை தடை செய்யவலியுறுத்தியும்விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சோகனூர் காலனியில் கடந்த 6-ஆம் தேதி தேர்தல் முன் விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தலித் இளைஞர்கள் அர்ஜுனன், சூர்யா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது குடும்பத்தினரை நேரில் சென்றுவிடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர்திருமாவளவன் ஆறுதல் கூறினார்.இதனைத்தொடர்ந்து கொலை சம்பவத்தின்உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்திவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும்கண்டனப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்திருமாவளவன் அறிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்சிந்தாமணி அண்ணாசிலை அருகில் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்குத் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலத் துணைச் செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.வடக்கு மாவட்டச் செயலாளர் நீலவண்ணன்முன்னிலை வகித்தார்.இதில், விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆதரவாகமக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ராஜா, செழியன், அனந்த், மக்கள் கலை இலக்கியக்கழகத்தின் நிர்வாகிகள் ஜீவா, லதா, திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைபாளர் புதியவன்,ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில்,தலித் இளைஞர்களை கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்யவும்,பாட்டாளி மக்கள் கட்சியைத் தடை செய்யவும்வலியுறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கைவைத்தனர்.