அரக்கோணம் அருகே நடைபெற்ற இரட்டைக்கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருவமாவளன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறுகிறது.
அரக்கோணம் அருகே உள்ள சோகனூரில், தேர்தல்முன்விரோதம் காரணமாக சூர்யா,அர்ஜுனன்என்ற இளைஞர்கள் அடித்துக்கொல்லப்பட்டதற்குப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. சம்பவம் நடைபெற்ற கிராமத்தில், அப்பகுதி மக்கள் இறந்தவர்களின் சடலங்களை வாங்க மறுத்துதொடர்ந்து நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இரட்டைக்கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று (10.04.2021) விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருவமாவளன்தலைமையில் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல்விழுப்புரம், கரூர், ஆரணி, மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களிலும் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/thiruma-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/thiruma-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/thiruma-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/thiruma-4.jpg)